நுகர்வோர் சட்டங்கள்

 

இந்திய சட்டங்கள் இந்திய அரசியலமைப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 39 வது பிரிவில் மாநில கொள்கையின் அடிப்படை உரிமைகளில் நாட்டின் குடிமகனின் நல்வாழ்வை மேம்படுத்தும் கொள்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சில நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் அடிப்படை உரிமைகள், வாழ்வதற்கான உரிமை, சமத்துவம் இவற்றை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன. நுகர்வோருக்கு பொருள்கள் மற்றும் சேவைகளை பகி¢£¢ந்தளித்தலில் பயன்படுத்தப்படும் பொது சட்டங்கள் மற்றும் விதிகள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன.

பொது சட்டங்கள் / சட்டத்தொகுப்பு / விதிகள்

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 (திருத்தம்- 2002)

நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் 1987

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் 1988

பொருட்கள் விற்பனைச் சட்டம் 1930

கள்ளச் சந்தை தடுப்பு மற்றும் அத்திய்வசியப் பொருள்கள் வழங்குதல் பராமரிப்புச் சட்டம் 1980

பொட்டலப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணை 1975

மனித உரிமைச் பாதுகாப்புச் சட்டம் 1993

மனித உரிமைச் பாதுகாப்புச் சட்டம் 1955

தண்ணீர் (பாதுகாப்பு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு) சட்டம் 1974

எம்.ஆர்.டி.பி ( Monopolies Restrictive Trade Practice) சட்டம் 1969

உணவு கலப்பட தடுப்புச் சட்டம் 1954

மருந்து மற்றும் மாயாஜால நோய் நீக்கிகள் மற்றும் ஆட்சேபத்திற்குரிய விளம்பரங்கள் சட்டம் 1954

தாய்ப்பால் மற்றும் உணவு பால் புட்டி மற்றும் குழந்தைகள் உணவு (வரன்முறை) சட்டம் 1992

இந்திய தர நிலைச் சட்டம் 1986

மேற்குறிப்பிட்ட சட்டங்கள் அனைத்தும் பல்வேறு நிலைகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளன. நுகர்வோரே பொறுப்பு என்பதையும் வலியுறுத்தும் விதமாக நுகர்வோர்க்குரிய இச்சட்டங்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வழிவகுத்துள்ளது.