தமிழ்நாடு அரசு,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பான
பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்காக “தமிழ்நாடு மாநில நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் ஆற்றலூட்டும்
சங்கம் (Tamil
Nadu State Society for Consumer Protection and Empowerment - TANSSCOPE)” என்ற சங்கத்தை உருவாக்கியுள்ளது.
இச்சங்கத்தின் தலைவராக (Ex-officio
President) உணவுப் பொருள்
வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இயக்குநர் அவர்கள் நியமனம்
செய்யப்பட்டுள்ளார். இச்சங்கம்
தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு, மத்திய சென்னை சங்கங்களின் பதிவாளரால் பதிவு எண் 70/2009
வழங்கப்பட்டு, ஏப்ரல் 2009 முதல் செயல்பட்டு வருகிறது.
நுகர்வோர்
பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பான பணிகளை விரிவான அளவில்
மேற்கொள்வதற்காக, ஒன்றிய அரசு மற்றும் தேசிய, சர்வதேச நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி பெறுவதற்கான
நடவடிக்கைகளும் இச்சங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர்
பாதுகாப்புத் துறையால், மாநில மற்றும் மாவட்ட அளவிலான தன்னார்வ நுகர்வோர்
அமைப்புகளுடன் (Voluntary Consumer Organisations) இணைந்து நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு
தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது, இச்சங்கத்தின் வாயிலாக மாநில நுகர்வோர் உதவி மையம் (State
Consumer Helpline) செயல்படுத்தப்பட்டு
வருவதுடன், “நுகர்வோர் கவசம்” மாத இதழ் வெளியிடப்பட்டு வருகிறது.
மேலும், நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி வகுப்புகள்,
கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும்
தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு மாநில நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் ஆற்றலூட்டும் சங்கத்தின் துணை விதிகள் - BYELAWS.pdf
தமிழ்நாடு
மாநில நுகர்வோர் நல
நிதி
அரசாணை (நிலை) எண்.26, கூட்டுறவு, உணவு
மற்றும்
நுகர்வோர்
பாதுகாப்புத்
துறை (H2), நாள்: 20.02.2006-இன்
மூலம், நுகர்வோர்
நலத்
திட்டங்களை
செயல்படுத்துவதற்காக
“தமிழ்நாடு மாநில
நுகர்வோர்
நல
நிதி” (Corpus
Fund) உருவாக்க தமிழ்நாடு அரசு
ஆணையிட்டதுடன்,
ஒன்றிய
அரசின்
ஆரம்ப
பங்குத்
தொகையாக
ரூ.50.00 இலட்சம்
வழங்கவும்
அனுமதி
வழங்கப்பட்டது.
மேற்கண்ட தமிழ்நாடு
மாநில
நுகர்வோர்
நல
நிதி, தமிழ்நாடு
அரசு
அரசிதழில் 25.04.2007 அன்று
வெளியிடப்பட்ட
தமிழ்நாடு மாநில
நுகர்வோர் நல
நிதி விதிகள்,
2007-ன்
படி
நிர்வகிக்கப்பட்டு
வருகிறது. மேலும், ஒன்றிய அரசு, நுகர்வோர்
விவகாரங்கள்,
உணவு
மற்றும்
பொது
விநியோக
அமைச்சகத்தின்
நுகர்வோர்
விவகாரங்கள்
துறையால், ஒன்றிய
அரசின்
பங்குத்
தொகையாக
ரூ.50.00 இலட்சம்
ஒதுக்கீடு
செய்யப்பட்டு,
அத்தொகையும்
தமிழ்நாடு
மாநில
நுகர்வோர்
நல
நிதியில்
வரவு
வைக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர்
நல நிதி
(Corpus Fund)
Ø நுகர்வோர்
நல
நிதியை
வலுப்படுத்தும்
நோக்கில், இந்திய
அரசு 75 சதவீத
ஒன்றிய
அரசுப்
பங்கும், 25 சதவீத
மாநில
அரசுப்
பங்கும்
கொண்ட
ரூ.10.00 கோடி
நுகர்வோர்
நல
நிதியை (Corpus Fund)
உருவாக்க
முன்மொழிந்தது.
அதன்படி, தமிழ்நாடு
அரசு “தமிழ்நாடு
நுகர்வோர்
நல
நிதி (Corpus
Fund)” என்ற பெயரில்
ரூ.10.00 கோடி
நுகர்வோர்
நல
நிதியை
அமைத்துள்ளது.
இந்நிதி, தமிழ்நாடு
நுகர்வோர்
நல
நிதி
விதிகள், 2007-ன்
படி
நிர்வகிக்கப்பட்டு
வருகிறது.
Ø ஒன்றிய
அரசின்
கடித
எண்
D.O.No.O-12011/04/2019-CWF, நாள்: 24.09.2019-இல், நுகர்வோர்
நல
நிதி
ரூ.10.00 கோடியிலிருந்து
ரூ.20.00 கோடியாக, தற்போதுள்ள
75:25 என்ற ஒன்றிய மற்றும்
மாநில
அரசுகளின்
பங்களிப்பு
விகிதத்தில்
உயர்த்தப்பட்டடது.
Ø நுகர்வோர்
நல
நிதியாக
வங்கிகளில்
முதலீடு
செய்யப்பட்ட
தொகை
எடுக்கப்பட்டு
செலவிடப்படாது.
அத்தொகைக்கு
கிடைக்கும்
வட்டித்
தொகை
மட்டுமே
நுகர்வோர்
நலத்
திட்டங்களுக்காக
பயன்படுத்தப்படுகிறது.
வைப்புத்
தொகைகளுக்கு
கிடைக்கும்
வட்டித்
தொகை
மற்றும்
ஆண்டுதோறும்
செலவிடப்பட்ட
தொகைகள்
தொடர்பான
விவரங்களை
உணவுப்பொருள்
வழங்கல்
மற்றும்
நுகர்வோர்
பாதுகாப்புத்
துறை
இயக்குநர்
அவர்கள்
தொகுத்து
அரசுக்கும்,
தமிழ்நாடு
கணக்காயர்
பொது (கணக்குகள்
மற்றும்
உரிமைகள்) அலுவலகத்திற்கும்
அனுப்பப்பட்டு
வருகின்றது.
Ø வைப்புத்
தொகைகளுக்கு
கிடைக்கும்
வட்டி
வருவாய், உரிய
கணக்குத்
தலைப்பின்
கீழ்
செலுத்தப்பட்டு,
“தமிழ்நாடு மாநில
நுகர்வோர்
நல
நிதி” இருப்பு
நிதிக்
கணக்கில் (Reserve
Fund) வரவு வைக்கப்படுகிறது.